That is a ‘land’ whose peaceful annals know,
Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.

Couplet Explanation

kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.

குறள் 734

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு

குறள் விளக்கம்

மு.வ உரை:

மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

கலைஞர் உரை:

பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்